அரசியல் பொய்யன் அமித் மால்வியா: டிவிட்டர் அறிவிப்பு

ராகுல் காந்தி வெளியிட்ட புகைப்படம் சம்பந்தப்பட்ட
வீடியோவை எடிட் செய்து, திரித்து வெளியிட்டு
டிவிட்டர் நிறுவனத்தால் அசிங்கப்பட்டிருக்கிறார்
பிஜேபி ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா

பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை முதலில் நியாயமற்றது என்றார்கள். பிறகு, காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது என்றார்கள். அதற்கும் பிறகு, போராட்டக்காரர்களை அரச படையினர் தாக்கவில்லை என்றார்கள். எல்லாமே பிஜேபி ஐடி பிரிவின் பொய்ப் பிரச்சாரங்கள்தான் என்பதை, டிவிட்டர் நிறுவனத்தின் அறிவிப்பு ஒன்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பிஜேபி ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியாவை இந்தியாவின் முதலாவது டிவிட்டர் அரசியல் பொய்யன் என அறிவித்துள்ளது டிவிட்டர் நிறுவனம்.

தலைநகரில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துகொண்டே செல்லும் நேரத்தில், பிஜேபி தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், மேற்கு வங்க பிஜேபி துணைப்பொறுப்பாளருமான அமித் மால்வியா, “ஊடகத்தை தவறாக கையாளுகிறார்” என டிவிட்டர் நிறுவனம் இன்று (புதன்கிழமை) சிவப்புக்கொடி காட்டியுள்ளது.

டிவிட்டரின் இந்த நடவடிக்கை பொய் செய்திகளை பரப்பும் முதலாவது இந்திய அரசியல்வாதி என மால்வியை குறிப்பிடுவதோடு, அமெரிக்க தேர்தல் சமயத்தில் டிவிட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்ட பல டிவீட்டுகளுக்கு சொந்தக்காரரான டொலான்டு டிரம்பின் கண்ணியமற்ற நடத்தையுடன் அமித் மால்வியாவையும் சேர்த்துக்கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ராகுல் காந்தி டிவீட் செய்த பஞ்சாப் விவசாயி தாக்கப்படுகின்ற புகைப்படம் உண்மையில் அது காட்டுவதுபோல் அல்லாமல், அந்த விவசாயி உண்மையில் தாக்கப்படவேயில்லை என்று கூறும் ஒட்டுவேலை செய்யப்பட்ட வீடியோவை மால்வியா பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

Imageகடந்த நவம்பர் 28-ஆம் தேதி, டெல்லி-ஹரியாணா எல்லையில், ஒரு வயதான விவசாயியை சிஆர்பிஎஃப் படைவீரர் அடிக்க குறிவைக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி டிவீட் செய்திருப்பதை மால்வியா குறிப்பிடுகிறார்.

ராகுல் காந்தி தனது டிவீட்டில்: “இது மிகவும் துயரமான புகைப்படம். ‘படைவீரன் வாழ்க விவசாயி வாழ்க’ என்பதே நம்முடை கோஷம், ஆனால் இன்று மோடியின் திமிர்த்தனத்தால் விவசாயிகளுக்கு எதிராக நிற்கின்றனர் வீரர்கள். இது மிகவும் ஆபத்தானது,” என கூறியுள்ளார்.

மால்வியா பதிவிட்டுள்ள வீடியோ டிவீட்டில், அதே விவசாயி சிபிஆர்எஃப் ஆளைக் கண்டு ஓடுகிறார், இதில் அவர்களுடைய தடிகள் அவரை தொட்டனவா என்பதே தெளிவாகத் தெரியவில்லை. “மிக நீண்டகாலமாக இந்தியா பார்த்துள்ளதிலேயே ராகுல் காந்திதான் மிகவும் வெட்கமில்லாத மனிதராக இருக்க வேண்டும்,” என்று அந்த வீடியோவுக்கு மேலே எழுதியுள்ளார்.

பின்னர் சில டிவிட்டர் பயனாளர்கள் ரஷ்யா டுடே மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகிய தளங்களில் இருந்து எடுத்த முழுமையான வீடியோ காட்சிகளைப் பகிர்ந்தனர், அவற்றில் மத்திய மாநில அரசுகளின் படைகள் பல விவசாயிகளையும் தாக்கியிருப்பதை காணமுடிந்தது, இவற்றில் ராகுல் காந்தி டிவீட் செய்திருந்த விவசாயியின் படமும் ஒன்று.

அந்த விவசாயியின் பெயர் கபுர்தலாவைச் சேர்ந்த சுக்தேவ் சிங். 58 வயதாகும் அவரை பூம்லைவ் வலைத்தளம் நேர்காணல் செய்திருக்கிறது. அவருக்கு முழங்கை, முதுகு மற்றும் முழங்கால் தசைப்பகுதிகளில் காயங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

பார்வையாளர்களுக்கு டிவிட்டர் கூறியுள்ள செய்தியில்: “பூம்லைவ் மற்றும் ஆல்ட்நியூஸ் ஆகியவற்றின் கூற்றுப்படி, விவசாயிகள் போராட்டத்தின்போது ஒரு முதியவரை போலீஸ் தடி தாக்கும் தாக்கும் காட்சி இந்த வீடியோவில் காணப்படவில்லை. பிடிஐ புகைப்பட பத்திரிக்கையாளரால் படம்பிடிக்கப்பட்ட, ஒரு வயதான விவசாயியைத் தாக்கும் காவல்துறை தடியடி புகைப்படம் வெளியிட்ட உடனே வைரலாகியுள்ளது.”

“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்த பின்னர், பிஜேபி-இன் அமித் மால்வியா அந்த நிகழ்வு குறித்த, எடிட் செய்யப்பட்ட வீடியோவை பதிவிட்டு பதிலளித்துள்ளார். மால்வியாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவில், அந்த வைரலான படத்தில் உள்ளவரின் மீது போலீஸ் தடி படாமல் இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், எடிட் செய்யப்படாத நீளமான வீடியோவை ஆய்வுசெய்த பூம்லைவ், அந்த மனிதரின் மீது இரண்டாவதாக ஒரு அதிகாரியின் தடி வீசப்படுவதை காணமுடிகிறது. பூம்லைவ் அந்த முதியவரை அடையாளம் கண்டிருக்கிறது. தனக்கு அடிபட்டிருப்பதையும், அந்த நிகழ்வினால் ஏற்பட்ட வீக்கங்களையும் அவர் காட்டியுள்ளார்.”

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே தன்னுடைய தளத்தில் இருக்கும் பொய்யான செய்திகளை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது, ஆனால் இப்போது அதை இந்தியாவில் இருந்தே செய்யத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் அதனிடம் முதலில் பிடிபட்டது மால்வியாதானா என்பதை அந்த நிறுவனம் இன்னமும் வெளியிடவில்லை.

இந்த டிவிட்டர் செயல்பாடு பற்றி கருத்து கேட்டு, பூம்லைவ் நிறுவனம் அனுப்பிய வாட்சப் செய்திக்கு மால்வியா இன்னமும் பதில் சொல்லவில்லை.

தமிழில்: மர்மயோகி
நன்றி: telegraphindia.com

 

Total Page Visits: 318 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *