மோடியின் செல்வாக்கு – கருத்துக்கணிப்பு பித்தலாட்டம் – வசீகரன்

மக்கள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
புலம்பெயர் தொழிளாலர்கள் பிரச்சினை
தீராத சோகமாக நீடிக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில்
மத்திய அரசின் இயலாமையை
உச்சநீதிமன்றமே சுட்டிக் காட்டிவிட்டது.

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதற்கு மாறாக, அரசு ஊரடங்கு கட்டுப்படுகளை தளர்த்தி வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு, நாள் ஒன்றிற்கு சுமார் 23 ஆயிரம் ரூபாய் கட்டணம் என அரசே நிர்ணயித்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளோ, மக்களிடம் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்ற அறிவுறுத்தலுடன் கைவிரித்துவிட்டன. ஆனால், இந்திய குடிமக்கள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். புலம்பெயர் தொழிளாலர்கள் பிரச்சினை தீராத சோகமாக நீடிக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் இயலாமையை உச்சநீதிமன்றமே சுட்டிக் காட்டிவிட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் செல்வாக்கை உயர்த்திக்காட்டி, மோடியின் வெற்றியாளர் பிம்பத்தை நிலைநிறுத்த, ஒரு நிறுவனம் தொடர்ந்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன் பெயர் சி-வோட்டர். அதாவது, வாக்களிப்பு அபிப்பிராயம் மற்றும் போக்குகள் பற்றிய தேர்தல் ஆய்வு மையம் (Centre for Voting Opinion & Trends in Election Research) என்பதன் சுருக்கம்தான் சி-வோட்டர் என்பதாகும்.) இது டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு இந்திய சர்வதேச கருத்துக்கணிப்பு நிறுவனம். 15 யூனியன் பட்ஜெட்டுகள், 100 மாநிலத் தேர்தல்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சர்வதேச நிகழ்வுகளில் இது கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

இந்த சி-வோட்டர் நிறுவனத்தை நிறுவியவர் யஷ்வந்த தேஷ்முக். மாஸ் கம்யூனிகேஷன் படித்த இவர் பல்வேறு செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். தேஷ்முக் 2000-ஆம் ஆண்டு சி-வோட்டர் நிறுவனத்தை உருவாக்கினார். இது உலகின் பல முன்ணணி செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த சி-வோட்டர் நிறுவனத்தின் அதிரகாரப்பூர்வ வலைத்தளத்தில் 2015 ஆண்டுக்குப் பின்னர் எந்தத் தகவலும் பதிவேற்றப்படவில்லை.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில், மோடியின் செல்வாக்கு நிலவரம் குறித்த கருத்துக் கணிப்பை சி-வோட்டர் நிறுவனம் இரண்டாவது முறையாக வெளியிட்டுள்ளது. இந்த சி-வோட்டர் நிறுவனம் ஏற்கனவே, மே மாத முதல் வாரத்தில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அதில், முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பிரதமர் மோடிக்கு 76.8 சதவீத மக்கள் ஆதரவு இருந்ததாகவும், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீடித்தபோது மோடிக்கு மக்கள் ஆதரவு 93.5 சதவீதமாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில், ஜுன் 3-ஆம் தேதி சி-வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய அளவில் 0.58 சதவீதம் மக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வு செய்யப்பட்ட 3,000 பேர்களிடம், கேட்டறியப்பட்ட கருத்தைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு முடிவு என சி-வோட்டர் தெரிவித்துள்ளது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், ஒரு மாநிலத்திற்கு 3,000 பேர் வீதம் கேட்கப்படும் அபிப்பிராயம் எப்படி பொதுக்கருத்தாகும். இப்படி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது மக்களில் .யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வழியாக மக்கள் அனைவரும் தெரிந்துக்கொள்கின்றனர். இதுதான் பித்தலாட்டம்.

கொரோனா பரவலை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு தட்டுத் தடுமாறும் இந்த நேரத்தில், மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளது, ஆனாலும், மோடி யாராலும் வீழ்த்த முடியாதவர் என்ற மாயத்தோற்றத்தை உருவக்குவதற்காகவே, எந்தப் பதவியிலும் இல்லாத ராகுல் காந்திக்கு மிக குறைவான ஆதரவு மட்டுமே உள்ளது என்ற தகவலும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

பதவியில் இருக்கும் ஒரு பிரதமரின் செல்வாக்கு, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு உள்ளது என்று கருத்துக்கணிப்பு வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

தேர்தல் சூழ்நிலை இல்லாத இந்த நேரத்தில், யாருக்கு எதிராக யார் என்ற அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன?

இவை எல்லாம் தாண்டி, இந்தக் கருத்துக்கணிப்புகள் யாரிடம் நடத்தப்படுகின்றன   ?

இப்படி பல குழப்பங்களுடன் கூடிய கருத்துக்கணிப்பு முடிவுகளை, முன்னணி ஊடகங்கள் எப்படி வெளியிடுகின்றன?

மக்கள் ஊடகங்களை நம்புகிறார்கள். இந்திய ஊடகங்கள் இந்திய சமூகத்தின் பரம்பரை மேலாதிக்க சக்தியான பார்ப்பனிய  அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் ஊடகத் தகவல்களை வைத்து கருத்துக்கணிப்பு செய்கின்றன. அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. மக்கள் ஊடகங்களை நம்புவதால் அந்த முடிவுகளையும் நம்புகிறார்கள். வெகுஜன மக்களின் மந்தை மனோபாவம், அந்த முடிவுகளை உண்மையாக்கிவிடுகிறது. இது ஒரு சூழ்ச்சிவலை. இந்த சூழ்ச்சிவலையில் சிக்கிய இந்திய குடிமக்கள் இரண்டுமுறை பிஜேபியை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

2015-ஆம் ஆண்டிற்கு முன்பு, மோடியை பிரதமர் ஆக்க இந்துத்துவ ஊடகப் படை களம் புகுந்தது. அது ஏற்கனவே பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குள் இருக்கும் பார்ப்பனிய சக்திகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு, பல ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பி, மோடி யாராலும் வெல்லமுடியதவர் என்ற மாயத்தோற்றத்தைக் கட்டமைத்தனர். அந்த மாயத்தோற்றத்தை கலையாமல் காப்பாற்றத்தான் இந்த பித்தலாட்டம் எல்லாம்.

இந்திய குடிமக்கள் மீது இந்த சூழ்ச்சி வலை மீண்டும் மீண்டும் வீசப்படுகிறது.

Total Page Visits: 334 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *