சவப்பெட்டிகளை செய்வதில் காட்டும் அக்கறையும் மக்கள் நலனும் – மருத்துவர்.அரவிந்தன் சிவக்குமார்

இதனால் மக்களுக்கு சொல்வது என்னவென்றால்
கொரோனாவை பற்றியும்
கொரோனா மரணத்தைப் பற்றியும் ஆய்வு செய்வோம்,
பயப்பட வேண்டாம்.

இத்தாலியில் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் மிக முக்கிய ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அதிலிருந்து சில தகவல்கள்:

  1. இறந்தவர்களின் சராசரி வயது 80.
  2. 49% சதவிகித நோயர்கள் கொரோனா தொற்றுக்கு முன்னரே 3-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவந்தனர்.
  3. 8 % சதவிகிதம் மட்டுமே எந்தவித உடல் நோயும் இல்லாதவர்கள்.
  4. அதாவது, இறப்புக்கான முக்கிய காரணம், 99% பேர் வேறொரு மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்துள்ளனர்.
  5. 75% உயர் ரத்த அழுத்தம், 35% சர்கரை நோய், 30% இருதய பிரச்சனை.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளின் அறிவியல் ஆய்வறிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்களால் ஏற்பட்ட இறப்புகளில் உலக அளவிலும், ஐரோப்பிய நாடுகளின் அளவிலும் இத்தாலி முன்னிலை வகிக்கிறது. அங்கு 2012-ல் 22,000 பேர் நுரையீரல் நோயால் இறந்துள்ளனர்.

80 வயதுக்கு மேற்பட்டோரின் இறப்பு விகிதத்தில் நுரையீரல் சார்ந்த பிரச்சினையும், நுரையீரல் புற்று நோயும் முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன.

இந்த ஆய்வறிக்கையில் நுரையீரல் சார்ந்த பிரச்சினை பற்றிய குறிப்பு இல்லை. ஆனால் இறப்புக்கான முதன்மை காரணம் என்ன தெரியுமா? நுரையீரல் செயலிழப்பு.

இந்த இத்தாலியின் இறப்புக்களை இத்தாலியின் பொருளாதார சிக்கன நடவடிக்கையின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். 2008-ல் தொடங்கிய Austerity measures சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சுகாதாரத் துறையை நொறுக்கியது. இதனை சமூக பாதுகாப்பு நடவடிக்கை குறைப்பு, வேலையின்மையால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பார்க்கவேண்டிய நிலை,  வயதானவர்கள் தனிமையில் இருப்பது, வேலையின்மையால் பிறப்பு விகிதம் குறைவு, இளைஞர்கள் 1,60,000 பேர் 2018-2019-ல் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்தல், மேலும் காற்று மாசுபாடு என்ற பல காரணங்களை வைத்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

எனவே இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது:

  1. இத்தாலியின் வயதானவர்களின் இறப்பு விகிதம் கடந்த 18 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
  2. 2008-2009-இல் இன்புளுவன்சா தொற்று ஏற்பட்டபோதும் நுரையீரல் பிரச்சனை உள்ள வயோதிகர்கள் இறந்துள்ளனர்.
  3. 2014-2015 ஆய்வின்படி ஐரோப்பிய இறப்பு விகித்தைவிட இத்தாலியில் வயோதிகர்கள் இறப்பு விகிதம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. 45000 பேர் 8 மாதத்தில் இறந்தனர். 2016-இல் செய்த ஆய்வில் நோய்க்கிருமிகள் இரத்தத்தில் பரவுவதலே(Sepsis) இதற்கான முதன்மை காரணம் என தெரிய வந்துள்ளது.
  4. பாசிச இத்தாலி மற்றும் ஜெர்மானியில், 1920-ல் இருந்தே வயதானவர்களை எப்படி நடத்ந வேண்டும் என்ற வரைபடம், அவர்கள் பொருளாதாரத்திற்கு பாரமானவர்கள் என்ற அந்த தத்துவம் வலதுசாரி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் போதெல்லாம் முன்வைக்கப்படுகிறது. இப்போதும் இத்தாலியில் வலதுசாரி அரசாங்கம்தான்.

முதலாம் உலகப்போர் முடிந்த தருவாயில், ஜெர்மனியில் ஒரு புத்தகம் வெளிவந்தது. 1920-ல் நீதிபதி காரல் பைண்டிங், மனநல மருத்துவர் ஆல்ப்ரெட் ஹோக் (Karl Binding and Alfred Hoche) ஆகியோர் எழுதிய அந்தப் புத்தகம், 1930-களின் இறுதியில் தொடங்கவிருந்த யூதர்களின் ‘ஹொலோகாஸ்ட்’ மற்றும் ‘இறுதித் தீர்வு’க்கான விதையாக இருக்கும் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாமலேயே இருந்தது.

‘வாழ்வதற்குத் தகுதியில்லாதவரின் வாழ்வைச் சிதைப்பதற்கான அனுமதி’ என்ற தலைப்பில் வெளிவந்த அந்த புத்தகத்தின் சாரம் இதுதான்:

‘வாழ்வதற்கு லாயக்கற்றோர் பட்டியலில் இருக்கும் மனநோயாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், ஊனமுற்றவர், வயது முதிர்ச்சியினால் முடங்கிக் கிடப்பவர்கள் ஆகியோருக்கு பொருளாதாரரீதியில் செலவு செய்வது தேவையற்றது; எனவே அவர்களுக்கு ‘விடுதலை’ அளிக்க கருணைக்கொலை என்ற வழிமுறையே சிறந்ததாகும்’ என்று அந்த புத்தகத்தில் கார்ல் பைண்டிங்கும் ஹோக்கும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இதெல்லாம் சேர்த்துப்பார்த்தால் உலகை அச்சுறுத்தி பயமுறுத்தி மக்களை பீதியில் வைத்திருந்து முடக்குவதற்கும், தங்கள் சுகாதார கட்டமைப்பின் செயலற்ற தன்மையும் நிதி ஒதுக்கீடு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்கும், உலகம் முழுக்க கொரோனாவின் Case Fatality Rate அதாவது கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2-3% என்று முத்திரை குத்தவும் இத்தாலி வயதானவர்களின் இறப்பு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், மருத்துவ அறத்தை மீறி யாருக்கு வைத்தியம் தேவை, யாரை சாகவிட வேண்டும் என்ற அரசாங்கத்தின் மனசாட்சியற்ற, மனிதத்தன்மையற்ற செயலை மருத்துவர்களை வைத்து செய்ய வைத்துள்ளதும் வருந்தத்தக்கது.

பிணக்குவியல்கள் சவப்பெட்டிகள் என்று பார்த்து பயப்படும் மக்களுக்கு ஒரே ஒரு வேண்டு கோள். பயம் வேண்டாம். மக்கள் இறப்பது கொரோனாவால் அல்ல…சுகாதார கட்டமைப்பின் சீர்கேட்டால்தான். சவப்பெட்டிகளை செய்வதற்கு முனைப்பு காட்டும் அரசுகள் மக்களை காக்க நடவடிக்கை எடுக்காததாலும்தான்.

மேலும் தெரிந்துகொள்ள:

Austerity measures:

https://en.wikipedia.org/wiki/Austerity

https://www.investopedia.com/terms/a/austerity.asp

https://www.investopedia.com/ask/answers/12/austerity-measures.asp

வாழ்வதற்குத் தகுதியில்லாதவரின் வாழ்வை சிதைப்பதற்கான அனுமதி

(Allowing the Destruction of Life Unworthy of Living):

https://en.wikipedia.org/wiki/Life_unworthy_of_life

காரல் பைண்டிங்

https://en.wikipedia.org/wiki/Karl_Binding

ஆல்ப்ரெட் ஹோக்

https://en.wikipedia.org/wiki/Alfred_Hoche

Total Page Visits: 255 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *