ஒரு பூனையின் புத்திமதி! – பிரன்ஸ் காஃப்கா

எலி சொல்லுகிறது . . .
“ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக்கொண்டே வருகிறது!
முதலில் ரொம்ப்ப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்த்து.
நான் ஓடிக்கொண்டே இருந்தேன்.
இரண்டு பக்கத்துச் சுவர்களும் தூரத்திலேதான் தெரிந்தன.
ஆனால் அந்தச் சுவர்கள் எவ்வளவு வேகமாக நெருங்கிவிட்டன.
கடைசியாக அறைக்குள்ளேயே வந்துவிட்டேன்!
அதோ தெரிகிறதே பொறி, அதில் அல்லவா நான் போய் விழவேண்டும் . . .”
“நீ இந்தப் பக்கமாக திரும்பி ஓடினால் பொறியில் விழ வேண்டியிருக்காது!”
என்று சொல்லிக்கொண்டே
அதைப் பிடித்து விழுங்கிவிட்டது ஒரு பூனை.
– தமிழில்: புதுமைப்பித்தன்
Total Page Visits: 112 - Today Page Visits: 1