நாம் என்ன செய்ய வேண்டும்? மோடி என்ன செய்வார்?

கொரோனா வைரஸின்

பொருளாதார தாக்கம் தெளிவாகிவிட்டது.

மோடியின் படைப்பிரிவு

சாமானிய மக்களின் தேவைகளை

விரைவாக பூர்த்திசெய்ய வேண்டிய

நேரம் வந்துவிட்டது.

கடந்த வியாழக்கிழமை இரவு கொரோனா வைரஸ் குறித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்த சவாலை எதிர்கொள்ளவிருக்கும் இந்தியாவின் தயார்நிலை குறித்து உத்திரவாதம் அளித்துள்ளார். கோவிட்-19 பரவுதலை தடுக்கும் விதமாக சமூக விலக்கு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டுமாய் அவர் இந்தியர்களை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உரையின் ஆரம்பத்திலேயே, இந்தியர்கள் இன்னும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கும் என்பதை தெளிவுபடுத்திவிட்டார். “வரப்போகும் சில வாரங்களுக்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், நேரத்தையும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த சிலநாட்களாகவே உள்ளுக்குள் மனநிம்மதி எட்டிப்பார்க்கிறது. இது சரியல்ல. இந்தியர்கள் ஒவ்வொருவரும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.”

சுய-கட்டுப்பாட்டை பின்பற்ற அழைப்பு விடுத்திருக்கும் மோடி, தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் எனவும், குறிப்பாக மூத்த குடிமகன்கள் மற்றவர்களை சென்று பார்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார். பின்னர், கடந்த காலங்களில், போர் காலங்களின்போது நடக்கின்ற முழு அடைப்புடன் ஒப்பிட்டு, மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை “ஜனதா ஊரடங்கு” என குறிப்பிட்டார். இந்த தொற்றுநோய் காலத்தின்போது மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குநர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு மாடிகளுக்கு வந்து கைதட்டவோ அல்லது மணியொலி எழுப்பவோ செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

மோடியின் மிகப்பெரிய பிரபலத்தன்மையை பயன்படுத்திக்கொள்ள இவையெல்லாம் பயன்மிக்க வழிகளாக இருக்கலாம்: இந்தியர்கள் மனநிம்மதி கொண்டிருக்க முடியாது என்பதையும், சமூக விலகல் எந்தளவுக்கு அவசியம் என்பதையும் அவர் தெளிவாகவே குறிப்பிட்டு காட்டிவிட்டார்.

இருப்பினும், இந்த ஒருநாள் சுய-ஊரடங்கு மிகுந்த பாசாங்குத்தனமாய் மாறிவிடலாம் என்ற பயமும் நிலவுகிறது – அதாவது இது முடிந்தவுடனே மக்கள் “வெற்றி” பெற்றுவிட்டதாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் இது ஒருநாள் போர் என்பதைவிட இதை ஒரு சோதனை ஓட்டமாக பார்க்கப்படவும், விளக்கப்படவும் வேண்டும். அத்துடன், ஜனதா ஊரடங்கின் ஒரு பகுதியாகிய இந்த சுய-ஊரடங்கு பாரதீய ஜனதா கட்சி கடந்த காலங்களில் ஊக்கப்படுத்தி வந்த கும்பல் அதிகாரம் அல்லது சமூக கண்காணிப்புக்கு இலக்காகிவிடாது என்ற உத்திரவாதத்தையும் அரசாங்கம் அளிக்க வேண்டும்.

தேசம் எதிர்கொள்கின்ற பொருளாதார சவாலையும் மோடி குறிப்பிட்டிருக்கிறார். உணவு, பால் அல்லது மருந்துகளில் எத்தகைய பற்றாக்குறையும் ஏற்படாது என அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஏழைகளின் தேவைகளை பணக்காரர்களும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், கூலிகளை குறைப்பதோ, யாரையும் வேலையைவிட்டு நீக்குவதோ வேண்டாம் எனவும் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை கையாளுவதற்கு ஒரு பொருளாதார சிறப்பு பிரிவையும் அவர் அறிவித்திருக்கிறார்.

இந்த இடத்தில்தான் அவருடைய பேச்சு சுருக்கமாக முடிந்துபோகிறது.

இந்த நோய் எந்தளவுக்கு தொற்று ஏற்படுத்தும் திறனுள்ளது என்பதை சீனாவே தெளிவுபடுத்தியபோது, ஜனவரி மாதத்தில் இருந்தே கொரோனா வைரஸின் ஆபத்துக்கள் குறித்து இந்தியாவிற்கு தெரிந்துவிட்டது. அதிலிருந்து ஒரு வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் இதனை ஒரு உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்துவிட்டது, அதற்குள்ளாகவே இந்த நோய் தொற்றிற்கு 1,00,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவிட்டனர், ஆயிரக்கணக்கானோர் இறந்தும் போய்விட்டனர்.

உலகப் பொருளாதாரத்தில் இந்த வைரஸின் தீவிர தாக்கமானது பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தெளிவடைய தொடங்கிவிட்டது. உலக நாடுகள் சமூக விலகல் விதிகளை விதிக்கவோ அல்லது முற்றிலுமாக மூடிக்கொள்ளவோ தொடங்கிவிட்ட நிலையில், இவற்றினால் சாமானிய மக்கள்தான் பொருளாதார தாக்குதலுக்கு ஆளாகப்போகிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது.

இதேபோன்ற உரைகள் நோய்த்தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களாலும் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில், குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் என்ன செய்யப்போகிறது, அது மக்களுக்கு நேரடியாக காசோலை அனுப்புமா அல்லது கடன்களை ரத்து செய்யுமா என்றும், சிறுதொழில்களுக்கு நிதியுதிகள் செய்யுமா என்றும் நியாயமன முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும், கேரள அரசாங்கம் ஏற்கனவே 20,000 கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை அறிவித்துவிட்டது. இதில் ரேஷன் பொருள்கள், கடன்கள் மற்றும் வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டங்களுக்கான நிதி ஆகியவையும் அடங்கும். உத்திரப் பிரதேச அரசாங்கள் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே பணத்தை செலுத்திவிடுவதாக அறிவித்திருக்கிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் மோடியின் சிறப்பு படை அறிவிப்பு தாமதமாக வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தால் முன்னேறிச்செல்ல போராடிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த வைரஸ் பிரம்மாண்டமான அளவில் பொருளாதார சவாலை விடுத்திருக்கிறது, உலகம் முழுவதிலும் தேவை மற்றும் அளிப்பு சங்கிலியை பாதித்திருக்கிறது. மிக விரைவில் எந்த விஷயமும் இயல்புநிலைக்கு திரும்புவதற்கான அறிகுறியே தென்படவில்லை.

இந்தியா, தனிநபர்களை இன்னும் அதிகப்படியாக சோதனை செய்யும் என மக்களுக்கு உத்திரவாதம் அளிப்பதற்காக பிரைம்டைம் உரையாற்ற வேண்டியது மோடியின் வேலையல்ல. ஆனால், பொருளாதார சிறப்பு பிரிவு விரைவாக செயல்பட்டு, சாமானிய மக்களுக்கும், பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கும் முடிந்தவரை சீக்கிரமாக உதவிகளை அறிவிக்க வேண்டியது அவசியம்.

Source: scroll.in

Total Page Visits: 324 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *