கொரோனாவை கட்டுப்படுத்தி மற்ற நாடுகளுக்கு உதவும் சீனா-க்யூபா

இத்தாலி கேட்ட மருத்துவ உதவிகளுக்கு பதிலாக

தங்களுடைய கையிருப்புக்களை குறைத்துக்கொள்ள இயலாது

என காரணம் கூறிய ஐரோப்பிய யூனியனும் அதன் உறுப்பு நாடுகளும்

இந்த கோரிக்கையை மறுத்துவிட்டன

 

சீனாவில் டிசம்பர் மாதம் இந்தக் கொள்ளை நோய் பரவத் தொடங்கியதில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில், உள்ளூர் அளவில் யாரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை. இருந்தாலும், வெளியில் இருந்து வருகிறவர்களுடைய நோய்த்தொற்றுடன் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது.

சீனாவில் டிசம்பர் மாதம் இந்தக் கொள்ளை நோய் பரவத் தொடங்கியதில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில், உள்ளூர் அளவில் யாரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை. இருந்தாலும், வெளியில் இருந்து வருகிறவர்களுடைய நோய்த்தொற்றுடன் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தக் கொள்ளை நோயின் மையமான வூஹானில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்கள் யாரும் பதிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன அரசாங்கத்தின் தகவல்படி சீனா முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை 34 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரையில், மொத்தம் 80,928 பேர் சீனாவில் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், 3,245 பேர் இறந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அன்றே இந்த நோயால் ஆசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் ஐரோப்பாவில் இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இது மேற்குலகில் நீண்டகால சுகாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா உதவி

இந்நிலையில், இந்த நோயினால் சுகாதாரம் சீர்குலைந்துள்ள மேற்குல நாடுகளுக்கு உதவ சீனாவும் க்யூபாவும் சர்வதேச அளவில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

ஐரோப்பா இப்போது இந்த நோயின் மையப்புள்ளியாக மாறிவிட்ட நிலையில், ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடான பிரான்சுக்கு 1 மில்லியன் அறுவைசிகிச்சை முகமூடிகளை சீனா அனுப்பிவைத்துள்ளது. இதனை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் வூஹானில் இந்த வைரஸ் முதல்முறையாக பரவத் தொடங்கியதுமே, 17 டன்கள் அளவுக்கான மருத்துவ உபகரணங்களை பெய்ஜிங்கிற்கு அனுப்பிவைத்த பிரான்சிற்கு நன்றி செலுத்தும் வகையில் சீனா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த வாரம், சுவாசக் கருவிகள் மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை சீனா ஒரு விமானம் நிறைய இத்தாலிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இத்தாலி இருந்துவருகிறது. இந்த நோயை எதிர்த்துப் போராட இத்தாலிக்கு 30 டன் உபகரணங்களுடன், தன்னுடைய 9 பேர் அடங்கிய மருத்துவக் குழுவையும் சீனா அனுப்பி வைத்துள்ளது. இது சீனா அனுப்பியுள்ள மூன்றாவது குழுவாகும்.

ஐரோப்பா உதவிசெய்ய மறுப்பு

கொரோனா வைரஸூடன் போராடுவதற்கான மருத்து உபகரணங்கள் உதவி கேட்டு இத்தாலி நாடு ஐரோப்பாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், தங்களுடைய கையிருப்புக்களை குறைத்துக்கொள்ள இயலாது என காரணம் கூறிய ஐரோப்பிய யூனியனும் அதன் உறுப்பு நாடுகளும் இந்த கோரிக்கையை மறுத்துவிட்டன. இந்த வாரம் தொடக்கத்திலேயே, கொரோனா வைரஸின் பிடியிலிருக்கும் இத்தாலிக்கு கேட்கப்பட்ட உதவிகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என ஐரோப்பிய யூனியனுக்கான நிரந்தர பிரதிநிதி மோரிஸியோ மஸாரி தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய யூனியன் உதவி செய்ய மறுத்ததற்குப் பின்னரே சீனா தன் உதவியைத் தொடங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவ சாதனங்களும் மருந்துகளும் கிடைப்பதை ஐரோப்பிய யூனியன்தான் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும், அத்துடன் இன்று இத்தாலிக்கும் இந்த நிலைதான் நாளை உலகம் முழுவதிலுமே இப்படிப்பட்ட நிலைமை ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இத்தாலி மட்டுமல்லாமல் செர்பியா, ஸ்பெயின், இராக், ஈரான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலக அளவில் உடனடி உதவி தேவைப்படுகின்ற எல்லா நாடுகளுக்குமே சீனா தன்னுடைய மருத்துவ உதவிகளை செய்துவருகிறது.

இவற்றில், அமெரிக்காவும் அடக்கம். சீன அரசாங்கத்தின் உதவி போக, சீன பில்லினரான ஜாக் மா மருத்துவ உபகரணங்கள் மற்றும் கோவிட்-19 சோதனைக் கருவிகளையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கியூபாவின் உதவி

சோசலிச நாடான க்யூபா, ஐரோப்பிய யூனியனில் உள்ள இத்தாலிக்கு உதவி செய்யும் வகையில் தன்னுடைய மருத்துவ குழுவினரை அந்நாட்டிற்கு முன்பே அனுப்பி வைத்துவிட்டது. மேலும், வெனிசுலாவுக்கும் தன்னுடைய மருத்துவக் குழுவை அனுப்பி வைத்துள்ளது.

பொது சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் க்யூபா

கொரோனா வைரஸுடன் போராடுவதற்கு சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தேர்வு செய்துள்ள 30 எதிர்ப்பு மருந்துகளுள் க்யூபாவின் Interferon Alpha 2b என்பதும் ஒன்றாகும். இது சீனா மற்றும் க்யூபாவின் கூட்டுறவான ChangHeber நிறுவனத்தால் இதுபோன்ற வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்காக 2003-ஆம் ஆண்டில் இருந்தே தயாரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா போன்ற வைரஸ்களுக்கு இது சிறந்த எதிர்ப்பு மருந்தாக விளங்குவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

1981-இல் டெங்கு காய்ச்சல் பரவித் தொடங்கியபோது அந்த நோயை கட்டுப்படுத்த க்யூபா இந்த Interferon Alpha 2b மருந்தை உருவாக்கியது. தற்போது, பல்வேறு நாடுகள் க்யூபாவிடம் இந்த மருந்தை கேட்டு கோரிக்கை வைத்துள்ளன.

Source: countercurrents.org

Total Page Visits: 109 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *