எஸ்சி பிரிவினர் மேம்பாட்டு நிதி: அமைச்சகங்களின் அலட்சியம் – நிதி ஷர்மா

தற்போதைய நிதியாண்டு முடிவுக்கு வரும் நிலையில் பெரும்பாலான அமைச்சகங்கள் 50-60 சதவிகித நிதியை பயன்படுத்தியுள்ளதாக காட்டியிருந்தாலும், பொதுத் திட்டங்களுக்காகத்தான் அவை செலவிடப்பட்டிருக்கின்றனவே தவிர  எஸ்சி பிரிவினருக்காக அல்ல என்று சீராய்வில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும், 41 அமைச்சகங்களும் தங்களுடைய மொத்த பட்ஜெட் செலவினத்தில் 2-20 சதவிகிதத்தை “எஸ்சி பிரிவினர் நலத்திட்ட ஒதுக்கீட்டீன்” கீழ் பயன்படுத்த வேண்டும்.

தற்போதைய நிதியாண்டில், அட்டவணை பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட நிதியை ஒரு அமைச்சகம்கூட முழுமையாக பயன்படுத்தவில்லை என உள்துறைய நிதி ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சமூக நீதி அமைச்சகம் மற்றும் நிதி பயன்பாட்டுத் துறை நடத்தியுள்ள உயர்மட்ட சீராய்வில், 41 அமைச்சகங்களுடைய  செயல்பாடும் அதிர்ச்சிகரமான முடிவுகளே தெரியவந்துள்ளன, இதில் ஒரே ஒரு அமைச்சகம் (கிராமப்புற மேம்பாடு) மட்டுமே திருப்திகரமாக பயன்படுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிதியாண்டு ஒரு மாதத்திற்குள் முடிவுக்கு வரும் நிலையில் பெரும்பாலான அமைச்சகங்கள் 50-60 சதவிகித நிதியை பயன்படுத்தியுள்ளதாக காட்டியிருந்தாலும், பொதுத் திட்டங்களுக்காகத்தான் அவை செலவிடப்பட்டிருக்கின்றனவே தவிர  அட்டவணைப் பிரிவினருக்காக அல்ல என்பது சீராய்வில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும், 41 அமைச்சகங்களும் தங்களுடைய மொத்த பட்ஜெட் செலவினத்தில் 2-20 சதவிகிதத்தை “அட்டவணைப் பிரிவினர் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கீட்டின்” கீழ் செலவிட வேண்டும்.

அமைச்சகங்கள் நேரடி திட்டங்களை அடையாளம் கண்டு, அதன் பின்னரே மாநிலவாரியாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2019-20-இல், எஸ்சி திட்டங்களுக்காக 81,340.74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்துறை சீராய்வின்போது, எஸ்சி பயனாளிகளுக்கான “பெயரளவு ஒதுக்கீடு” என சமூகநீதி மற்றும் அதிகாரங்கள் அமைச்சகம் குறிப்பிடுவதைத்தான் எல்லாத் துறைகளும் வழக்கமாக செய்து வந்திருக்கின்றன என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. உதாரணத்திற்கு, பள்ளி கல்வித்துறை 67 சதவிகித நிதியை பயன்படுத்தியிருக்கிறது, ஆனால் அந்த ஒதுக்கீடு சமக்ர ஷிக்ஸா திட்டத்தின் கீழேதான் பள்ளிகளில் உள்ள எஸ்சி மாணவர்களின் விகிதாச்சாரத்தின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்திற்கும் ஒரு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. “இந்த ஒதுக்கீடுகள் எல்லாமே இந்தப் பள்ளிகளிலும் சேர்ந்துள்ள எஸ்சி மாணவர்களுக்கு பொதுப்படையாக வழங்கப்பட்டுள்ளன. இவை எதுவும் நேரடியான திட்டங்கள் கிடையாது,” என்கிறார் ஒரு அதிகாரி.

எஸ்சி பிரிவினர் நலத்துறை ஒதுக்கீட்டு நிதிகள் என்பவை எஸ்சி பிரிவினர் பயன்பெறுவதற்கான, பிரத்யேக நேரடி திட்டங்களாகும். எல்லோருக்குமாக சேர்த்து ஒதுக்கப்படுகின்ற வழக்கமான ஒதுக்கீடு எஸ்சி பிரிவினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லா மாணவர்களுக்குமே சென்றுசேரும். இந்த சீராய்வின்போது, குறிப்பான திட்டங்களை அடையாளம் காணுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, நேரடியாக எஸ்சி பிரிவு மாணவர்களுக்கு செல்லும்படியான, தேசியரீதியிலான மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஒதுக்கீடுகள் பொதுப்படையாகவும் கருத்தளவினதாகவும் செய்யப்பட்டிருப்பதால், இந்த மேம்பாட்டுத் திட்டங்களில் இருந்து எஸ்சி பிரிவு பயனாளிகள் எவ்வளவு பேர் பயனடைந்தார்கள் என்ற பதிவு அமைச்சகங்களிடம் இல்லை.

Source: economictimes.indiatimes.com

Total Page Visits: 49 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *