மேற்குவங்க மாநில வங்கதேசத்தவர்கள் இந்தியர்களே: மம்தா பானர்ஜி

வங்கதேசத்தில் இருந்து இங்கே வந்துள்ள, இங்கு நடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ள அனைவரும் இந்தியர்களே, அவர்கள் குடியுரிமைக்காக புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுவரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியுள்ள டெல்லி கலவரங்களை கையாண்ட மோடி அரசாங்கத்தை விமர்சித்த அவர், மேற்குவங்கம் மற்றொரு டெல்லியாக மாறுவதை தான் அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

நேற்று (செவ்வாய்) நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “வங்கதேசத்தில் இருந்து வந்துள்ளவர்கள் இந்திய குடிமக்கள்தான் . . . அவர்களுக்கு இங்கே குடியுரிமை இருக்கிறது. நீங்கள் மறுபடியும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. நீங்கள் தேர்தலில் வாக்களித்திருக்கிறீர்கள், பிரதமர், முதல்வர், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். . . இப்போது என்னவென்றால் நீங்களெல்லாம் குடிமக்கள் இல்லை என்கிறார்கள். நீங்கள் எல்லோருமே இந்த நாட்டின் உண்மையான குடிமக்கள்தன்,” என்று கூறியுள்ளார்.

ஒருவரைக்கூட வங்காளத்தில் இருந்து வெளியேற்ற தான் அனுமதிப்போவதில்லை என்று உறுதியளித்துள்ள மேற்கு வங்க முதல்வர், இந்த மாநிலத்தில் வாழும் எந்த அகதிக்கும் குடியுரிமை இல்லாமல் இருக்காது என்றும் கூறியுள்ளார். “உங்களுக்கு முகவரி, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் எல்லாம் உண்டு. பிஜேபியின் இந்த புதிய அட்டையைப் பெறவேண்டிய தேவையில்லை. கவலைப்படாதீர்கள், இந்த தீதீ எப்போதும் உங்களுக்குப் பின்னால் இருப்பேன். உங்கள் குடும்பம் என் குடும்பம். நம்முடைய மக்களின் உரிமைகளைப் பறிக்க நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன்,” என்று உறுதியளித்தார்.

மேலும், ஊடுருவல்காரர்களை, குறிப்பாக வங்தேசத்திலிருந்து வந்தவர்களை களையெடுப்பதாக சொல்லிக்கொண்டு  உண்மையான வங்காளிகள், ராஜ்போங்ஷிகள் மற்றும் முஸ்லீம் குடிமக்களில் பெரும்பாலானவர்களை தேசிய குடிமக்கள் பதிவில்(என்ஆர்சி) இருந்து அசாம் பிஜேபி அரசாங்கம் நீக்கம் செய்துவருகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்து பேசும்போது, “இது வங்காளம் என்பதை மறந்துவிடாதீர்கள். டெல்லியில் நடந்தவற்றை இங்கே நடக்க அனுமதிக்க மாட்டோம். வங்காளத்தை இன்னொரு டெல்லியாகவோ அல்லது உத்திரப் பிரதேசமாகவோ மாற்ற நாங்கள் விரும்பவில்லை,” என்றார் மம்தா பானர்ஜி.

  • PTI
Total Page Visits: 174 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *