இந்தியாவுக்கு ஆயுத விற்பனை: டிரம்பை வெளுத்த பெர்னி சாண்டர்ஸ்

இந்தியாவுக்கு ஆயுத விற்பனை செய்திருக்கும் அதிபர் டொனால்டு டிரம்பை கடுமையாக சாடியுள்ளார், அமெரிக்க அதிபர் வேட்பாளராக முன்னிலை வகிக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ். ஆயுத விற்பனைக்கு பதிலாக இந்த பூவுலை காப்பாற்றுவதற்காகவும், காலநிலை மாற்ற போராட்டத்திற்காகவும்தான் அமெரிக்கா கைகோர்த்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள டிரம்ப், இந்தியாவுடன் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பாதுகாப்பு வர்த்தகத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். அகமதாபாத்தில் நடந்த “நமஸ்தே டிரம்ப்” பேரணியில் பேசிய டிரம்ப், 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்பதற்கான பேரத்தை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெர்னி சாண்டர்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஆயுதங்களை மேம்படுத்துவதற்கு பதிலாக, காலநிலை மாற்ற போராட்டத்திற்காக இந்தியாவுடன் அமெரிக்கா கைகோர்த்திருக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் காற்று மாசுபாட்டை தடுக்க முடியும், நல்ல ஆற்றல் மேம்பாட்டு வேலைவாய்ப்புக்களை உருவாக்கி நம்முடைய பூவுலகை காப்பாற்ற முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான ஆயுதபேர வர்த்தகம் 2008-ஆம் ஆண்டில் பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்து, தற்போது 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ஏறக்குறைய இந்திய ரூபாய் 14,34,85,00,00,000.00) உயர்ந்துள்ளது.

Source: PTI

Total Page Visits: 103 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *