உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற எளிய வழி..!

புகைபிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு தரும்.. என நன்றாக தெரிந்தும் பலர் புகைப்பிடிக்கிறார்கள். அப்படி புகைப்பிடிப்பதை நிறுத்த ஆசைப்படுவர்களுக்கு தான் இந்த நியூஸ்.

புகைப்பதை நிறுத்திவிட்டால் மட்டும் போதாது. நாம் புகைபிடித்த சமயத்தில் நுரையீரலில் படிந்திருக்கும் நிகோடின் கழிவுகளை அகற்றுவது மிகவும் முக்கியம்.

நுரையீரலை சுத்தம் செய்யும் பிரதான பணியை வெங்காயம் செய்கிறது. இதுமட்டுமல்லாது நுரையீரலில் இருக்கும் நோய் தொற்றுக்களை கூட அகற்றும் ஆற்றலானது வெங்காயத்தில் அதிகளவில் உள்ளது. 

புகை பிடிப்பவர்களுக்கு உடலில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களானது குறைந்துவிடும். இந்த குறைந்த வைட்டமின்களை மீண்டும் மீட்பதற்கு நெல்லிக்காய், கிவி பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும். 

இதன் மூலமாக நுரையீரலின் செயல்பாடானது அதிகரித்து, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பானது குறைகிறது.

இதுமட்டுமல்லாது கீரைவகை உணவுகள், அதிகளவு தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்தல் ஆகியவை மிகவும் அவசியம். 

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.