தர்பார் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியானது

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிக்கும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு போலிஸ் கதாபாத்திரம் ஏற்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். மும்பையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் வெளியாகி இருந்த சூழலில், ஓணம் திருநாளை முன்னிட்டு இன்று படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஜினி சட்டையின்றி மிகவும் இளமையாக இருக்கிறார்,  இது அவரின் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் தர்பார் திரைப்படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என்கிற தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.