தொப்பையை கரைக்கும் துளசி..

ஆயுர்வேத மருத்துவத்தில் ராஜா மூலிகை என்ற இது துளசி தான். நவீன மருத்துவத்தில் கூட துளசி அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. 

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த துளசி கொண்டு தொப்பையை எளிதாக குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..? 

ஆயுர்வேத மருத்துவத்தில் எடையை குறைக்க முதலில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு துளசி இலை சிறந்த மருந்தாக உதவும். 

உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற நச்சுக்களை முழுவதுமாக இது நீக்கி விடும். அத்துடன் இரத்திலுள்ள கொழுப்பையும் (கொலஸ்ட்ரால்) நீக்க கூடிய பண்பு இதற்குண்டு. 

செரிமான மண்டலம் நன்றாக, எந்த வித நோயுமின்றி இருந்தால் மட்டுமே நமது உடல் எடை சரியாக இருக்கும். செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. அவற்றின் அளவை சீராக வைத்திருக்க இந்த துளசி உதவும்.

துளசி உடல் எடையை குறைத்து, ஹார்மோன் குறைபாட்டை சரி செய்யும் என ஆயுர்வேத மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

தினமும் நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளை வாயில் போட்டு மென்று விழுங்கினால் போதும். அல்லது துளசி டீ வைத்து பருகினால் போதும். இந்த முறையில் உடல் எடை குறைப்பு மிக மிக சாத்தியம்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.