தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி முரளிதரனாய் நடிக்கும் விஜய் சேதுபதி  

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை பயோபிக் திரைப்படமாய் உருவாக உள்ளது, ஸ்ரீபதி ரங்கசாமி என்பவர்  இயக்கும் இந்த திரைப்படத்தை தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின, தன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த முத்தையா முரளிதரன், “விஜய் சேதுபதி போன்ற ஒரு திறமையான நடிகர் என் கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு பெருமை” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதை முரளிதரன் வரவேற்றாலும் சமூகவலைத்தளங்களில் பல தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், முத்தையா முரளிதரன் ஈழ தமிழர்களுக்கு எதிரானவர் என்றும் அவரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என வெளிநாடுவாழ் ஈழ  தமிழர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தில் ஒப்பந்தமாக கூடாது என அறிக்கை வெளியிட்டது. இப்படி பல்வேறு தரப்பிலும் வந்த எதிர்ப்புகளின்  காரணத்தால் நடிகர் விஜய் சேதுபதி முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாய் செய்திகள் வெளியாகின, இந்த முடிவை பலரும் வரவேற்றனர். இந்நிலையில் பலதரப்பு எதிர்ப்புகளையும் மீறி நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி “நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனிடமே இதை நேரில் சொன்னேன். இந்த படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றிய கதை அல்ல. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்கள் படத்தில் இருக்கும். என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன். அதுபோன்ற ஒரு காட்சியும் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்க மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.