தளபதி விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி 

வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார் தளபதி விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாய்  தயாரிக்கும் இந்த படத்தினை இயக்குனர் அட்லீ  இயக்கிவருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள பிகில் திரைபடக்குழு தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதில் உறுதியாய் உள்ளது. இதற்கிடையில் தளபதி விஜயின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜயின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் என்றும், படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் என்ற அதிகாரப்பூர்வ  தகவல் வெளியாகியுள்ளது, மேலும் படத்தின் தொழில்நுட்ப குழுவில் இடம்பெறுவோரின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாய் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் பேசியதாகவும், படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி கதை சிறப்பாக உள்ளதாகவும் நிச்சயம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கொடுப்பதாகவும் சொல்லியிருப்பதாய் செய்திகள் வருகின்றன. சேதுபதி தொடர்ந்து அதிக படங்களில் நடித்து வருவதால் தளபதி விஜய் படத்திற்கு தேவைப்படும் நாட்களை அவரால் தர முடியுமா என்பதை பொறுத்தே தளபதி விஜய்க்கு  வில்லனாய் விஜய் சேதுபதியை திரையில் பார்க்கமுடியுமா என்பது உறுதியாகவும். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.