திருமலைக்கு வாகனங்களில் செல்ல தடை

 திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பாதையான திருமலை பாதையில், 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய வாகனங்கள் செல்ல, தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. பெரும்பாலும், திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலை பாதை வழியாக சொந்த அல்லது வாடகை வாகனங்களின் மூலம் செல்வது வழக்கம். இதில் பழைய வாகனங்கள் பல இந்த பாதைகளில் தினமும் பயணிக்கின்றன அதில் இருந்து வெளிவரும் நச்சு புகை மலைப்பகுதியின் சுற்றுச்சூழலை அதிகம் பாதிப்பதாய் தேவஸ்தானம் கருதுகிறது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம், 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய வாகனங்களை திருமலை பாதைக்குள் அனுமதிக்க முடியாது என தேவஸ்தானத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கையால் அந்த வாகனங்களில் வந்த பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர், தேவஸ்தான அதிகாரிகளிடமும் இது குறித்து முறையிட்டனர். அதை ஏற்று, இந்த நடவடிக்கையை அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு கொண்டு வரலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது திருப்பதி தேவஸ்தானம், அக்டோபர் மாதம்  முதல் திருமலை பகுதியில் 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய வாகனங்கள் அனுமதிக்கப்படாது எனவும், இதுகுறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தவும் தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.