டாட்டூ.. இதுதான் டிரென்ட்..!

அன்று பச்சை குத்துதல், இன்று டாட்டூ. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பச்சை குத்தும் பழக்கம் இருந்தாலும் நடுவில் இதை மக்கள் முழுமையாக கைவிட்டனர். 

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக உலகளவில் டாட்டூ போட்டுக்கொள்வது டிரென்டிங் ஆகியுள்ளது. அதிலும் புதுமையாக, தற்போது மினிமலிச டாட்டூ என்பது இந்தியாவில் அனைத்து வயதினரையும் ஈர்த்து வருகிறது. 

டாட்டூக்கள் பெரிதாகவும், சிக்கலாகவும்தான் இருக்க வேண்டுமென்பது இல்லாமல் சிறியதாகவும், எளிமையாகவும் கூட இருக்கலாம் என்பது தான் மினிமலிச டாட்டூ. 

விரல்கள், கழுத்து, கணுக்கால், புஜம், காதுமடல் என உடலின் எந்த இடத்திலும் மினிமலிச டாட்டு பொருந்திவிடும். பொதுவாக டாட்டூ வரைந்திருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற பொதுப் பார்வையையும் தகர்க்கிறது இந்த மினிமலிச டாட்டுகள்.

இதுவும் இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தது தான். நம் பாட்டிகளின் கை மணிக்கட்டுகளைப் பார்த்தால் மயில்களாகவோ, ஓவியங்களாகவோ மினிமலிச டாட்டூகள் இன்னமும் கதைபேசிக் கொண்டிருக்கின்றன.
 

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.