ஸ்பைடர்மேனை காப்பாற்ற துடிக்கும் ரசிகர்கள்

காமிக்ஸ் உலகில் அதிக ரசிகர்களை கொண்டது ஸ்பைடர் மேன் கதாபாத்திரம், டிஸ்னி  நிறுவனத்துக்கு சொந்தமான மார்வெல் காமிக்ஸ்களில் ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோவால் உருவாக்கப்பட்ட ஸ்பைடர்  மேன் கதாபாத்திரம் உலகின் எல்லா நாட்டு  சிறுவர்களையும்  கவர்ந்தது. 2015 ஆம் ஆண்டு டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, அதில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் வரும் திரைப்படங்களை சேர்ந்து தயாரித்து, வரும் லாபத்தை  பிரித்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. அதே ஆண்டு ஸ்பைடர்மேனின் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரத்துக்கு டாம் ஹோல்லாண்ட் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் கொண்ட பல படங்கள் உலகம் முழுக்க வெளியாகி நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றது. இந்த சூழலில், எதிர்கால தயாரிப்பு திட்டம் குறித்து டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்களிடம்  ஒரு உடன்பாடு ஏற்படவில்லையாம், டிஸ்னி முன்வைத்த உடன்பாட்டை சோனி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை அதே போல சோனி நிறுவனத்தின் யோசனையையும் டிஸ்னி நிறுவனம் மறுக்கிறதாம். ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தின் திரைப்பட உரிமை சோனி நிறுவனத்திடம் இருப்பதால், இரு நிறுவனங்களும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே மீண்டும் ஸ்பைடர்மேனை திரைப்படங்களில் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. தங்களின் விருப்பத்துக்குரிய ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை திரையில்  பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து #SaveSpiderMan என்ற ஹாஷ்டேக்கை உலகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ஸ்பைடர்மேன் ரசிகர்கள், மக்களை காப்பாற்றும் கதாபாத்திரமான  ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை  ரசிகர்கள் காப்பாற்ற துடிக்கின்றனர்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.