ரூ.6,799-விலையில் சூப்பர் ஸ்மார்ட் டிவி!

வேகமாக வளர்த்து வரும் இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மலிவு விலையில் பல ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன,அந்த வரிசையில் நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இரண்டு அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

நோபிள் ஸ்கியோடோ நிறுவனம்  24-இன்ச் மற்றும் 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது,  24-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் 1366x768 பிக்சல் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. 32-இன்ச் (NB32R01) ஸ்மார்ட் டிவி 1366x768 பிக்சல் அடிப்படையில் வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அனைத்திலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் வசதிகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் பில்ட்-இன் கேம் மற்றும் பல்வேறு செயலிகளை பயன்படுத்த முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள இன்-பில்ட் ஸபீக்கர்கள் 20 வாட் திறன் கொண்டிருக்கிறது. 

பிளிப்கார்ட் தளத்தில் இந்த நோபிளஸ் 24-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.6,799-ஆக உள்ளது, இந்த டிவி மாடலை வாங்குவோருக்கு மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது. பழைய டிவியை கொடுத்து அதிகபட்சம் ரூ.3000-வரை தள்ளுபடியும் பெற முடியும். 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 8,499-ஆக உள்ளது. இதற்கு அதிகபட்சமாக ரூ. 4000 வரை  எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.