ராணுவ பைலட் கதாபாத்திரத்தில் பிரபல வாரிசு நடிகை 

பாலிவுட் திரையுலகில் உருவாகிவரும் அதிக பயோபிக்  திரைப்படங்களின் வரிசையில், கார்கில் போரின்போது பல இந்திய ராணுவ வீரர்களை காப்பாற்றிய பெண் ராணுவ பைலட் குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய அவரின் பயோபிக் திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த திரைப்படத்தில்   குஞ்சன் சக்சேனாவின் கதாபாத்திரத்தில்  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் நடித்துள்ளார். குஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் என்ற  அடைமொழிபெயரில் அழைக்கப்படுவதால் இந்த திரைப்படத்திற்கு  ‘குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா  ப்ரொடக்‌ஷன் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஜான்வி கபூர் அறிமுகமான தடக் திரைப்படத்தையும் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. குஞ்ஜன் சக்சேனா கார்கில் போர் சமயத்தில் காயம்பட்ட எண்ணற்ற இந்திய ராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக இடம் மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். சவுர்ய சக்ரா விருது பெற்ற முதல் பெண்ணும் இவரே. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பகிர்ந்த படத்தின் தயாரிப்பாளர் கரண்  ஜோஹர்  "பெண்ணால் பைலட் ஆக முடியாது என்றார்கள். ஆனால், உறுதியாக இருந்து பறக்க வேண்டும் என்று விரும்பினார்!. 'குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்’, மார்ச் 13, 2020 அன்று வெளியாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த படத்தில் நடிப்பதற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆறு கிலோ வரை தன் உடல் எடையை குறைத்துள்ளாராம் ஜான்வி கபூர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.