பாலகோட் தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்திய படத்தை தயாரிக்கும் அஜித் பட வில்லன்  

44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாக காரணமாய் இருந்த புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்ட  ஜெய்ஷ்-இ- முகமது என்ற பிரிவினைவாத அமைப்பிற்கு பதிலடிகொடுக்கும் விதமாய் அந்த அமைப்பின் பயிற்சிமுகாம் அமைந்திருக்கும் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியை இந்திய விமான படைத்தாக்கியதாகவும், அந்த தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவங்களை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாய் நடித்த விவேக் ஓபராய் தயாரிக்கிறாராம். விமானப்படை வீரர் அபிநந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் குறித்து விவேக் ஓபராய் கூறும்போது, “நமது படையினரின் வீரத்தை போற்றவேண்டியது ஒரு இந்தியன் என்ற முறையில் எனது கடமை. அபிநந்தன் உள்ளிட்ட நமது வீரர்களின் சாகசங்கள் இந்த படத்தின் மூலம் வெளிப்படும். பாலகோட் தாக்குதலை இந்திய விமானப்படை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியது. அபிநந்தன் இந்தியர்களுக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார். இந்த படத்தை எடுக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது” என்றார்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.