ஒரு லிட்டர் தண்ணீரை சேமிக்க சொல்லும் மத்திய அரசு

நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம் ஜல் சக்தி அபியான், இந்த திட்டத்தில் பள்ளி மாணவர்களையும் இணைக்க மத்திய அரசும்,  சி.பி.எஸ்.இ நிர்வாகமும் ஆர்வம்காட்டுகின்றன, அதன் படி சி.பி.எஸ்.இ  பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும், தினசரி ஒரு லிட்டர் தண்ணீராவது சேமிக்க வேண்டும் என்றும் இதனை, ஒவ்வொரு சி.பி.எஸ்.இ பள்ளிகளும் கண்காணிப்பது அவசியம் என்று சி.பி.எஸ்.இ நிர்வாகம் பள்ளிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை வலிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருது கூறிய சி.பி.எஸ்.இ  தலைவர்  அனிதா கர்வால் “ஸ்திரமான சுற்றுச்சூழலை அமைக்க மாணவர்கள் சூழலியல் குழுக்கள் மூலம், சுற்றுச்சூழல் மட்டுமல்லாது, பருவநிலை மாற்றம், தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றைக் குறித்தும் இனி கற்கத் தொடங்குவார்கள். தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை சுற்றுச்சூழல் கல்வி ஊக்குவிக்கப்படும். 2019-2020 கல்வியாண்டில் அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளும் இதை நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும். வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி ஒரு நாளில் மாணவர் ஒருவர் 1 லிட்டர் தண்ணீரை சேமிக்க வலியுறுத்துவோம். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரையில் இத்திட்டத்தை அறிவுறுத்துகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் இல்லா பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்பதே குறிக்கோள் ஆகும்” என்றார்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.