முதல் விண்வெளி குற்றம் - நாசா விசாரணை

அன்னே மெக்லைன் (Anne McClain)  எனும் விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தமது முன்னாள் ஒருபாலின இணையரின் வங்கிக் கணக்கை இயக்கியதாய் குற்றம்சாட்டப்பட்டார், இந்த விவகாரம் குறித்து நாசா விசாரித்து வருகிறது. இது குறித்து அன்னே மெக்லைன் கூறுகையில், தாம் விண்ணில் இருந்து வங்கி கணக்கை இயக்கியதை ஒப்புக்கொள்வதாகவும், தம் முன்னாள் இணையர் மற்றும் அவரது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என்று பரிசோதனை மட்டுமே செய்ததாய் கூறியுள்ளார். ஒரு பாலின இணையனரான அன்னே மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப் படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2018ல் விவாகரத்துக்கு விண்ணப்பத்தினர். சம்மர் வொர்டன் தனது வங்கிக் கணக்கை, மெக்லைன் இயக்கியதாக மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டில் அன்னே மெக்லைன் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர் எந்த நாட்டை சேர்ந்தவரோ அந்த நாட்டின் சட்டத்தின் படியே அவர் தண்டிக்கப்படுவார்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.