மோடியின் வழியில் கமல்ஹாசன் : வெல்லுமா கமலின் புதிய கூட்டணி ?

2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற  தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற, அந்த தேர்தலில் மோடிக்காக தேர்தல் பணியாற்றிய அரசியல் வித்தகர் என அழைக்கபடும் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரின் ஐபேக் நிறுவனம் ஆற்றிய தேர்தல் பணிகள் மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த வெற்றியை தொடர்ந்து பிகார் மாநிலத்தில் நிதிஷ்குமார், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் வெற்றி பெற பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் செய்த தேர்தல் பணிகளே காரணமாய் அமைந்தது. ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி போன்ற முக்கிய தலைவர்களுக்காகவும் இவரின் நிறுவனம் தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறது. 
இதற்க்கிடையில் வரும் 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம், தமிழகத்தில் எந்த கட்சிகாக வேலை செய்யபோகிறது என்பது முக்கியமானதாக பார்க்கபடுகிறது. தன் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரஷாந்த் கிஷோரை தங்கள் கட்சிகாக தமிழகத்தில் களமிறக்க ஆர்வம்காட்டி வருகிறது. ஏற்கனவே, தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் பிரஷாந்த் கிஷோரை தமக்காகவும், தம் கட்சிகாகவும் பதிவுசெய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பிரஷாந்த் கிஷோருடன் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார் . இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்துள்ளது, வரும் சட்டமன்ற தேர்தல், கட்சிகளின் கூட்டணி போன்றவை ஆலோசிக்கபட்டதாக தெரிகிறது. விரைவில் கமலுடன் பிரஷாந்த் கிஷோர் கைகோர்க்கவுள்ளார், அது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பிரமுகர் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான்கு சதவிகித வாக்குகளை பெற்ற மக்கள் நிதி மய்யம் கிராமங்களை விட, நகர பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாகவும், அந்த கட்சிக்கு பெண்களின் வாக்குகள் சரியாக கிடைக்கவில்லை என ஐபேக் நிறுவனம் கூறியுள்ளதாம். 

அதிமுக விடம் செய்த ஒப்பந்தப்படி அந்த கட்சிக்கும் ஐபேக் நிறுவனம் வேலைசெய்தாக வேண்டும். ஒரே மாநிலத்தில் எப்படி இரண்டு வெவ்வேறு கட்சிகளுக்கும் வேலைபார்ப்பது என ஐபேக் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.