மீண்டும், ஒரு பிரதமரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 

இந்திய சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட், வாழ்க்கை  வரலாற்றுப்  திரைப்படங்கள். இந்த வகை திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்புள்ளது, முக்கியமாக தாங்கள் அதிகம் தெரிந்துகொள்ள  விரும்பும் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும்  வாழ்க்கை வரலாற்றுப் திரைப்படங்கள் அதிக கவனம் பெறுகின்றன. இதிலும்,  அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக வரவேற்பையும் கூடவே சர்ச்சைகளையும் ஏற்படுத்திகின்றன. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரே, ஆந்திர முன்னாள் முதல்வர்களான என்.டி.ஆர், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, தமிழக முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வின்  வாழ்க்கையும் திரைப்படங்களாய் வெளியாகவுள்ளன. இந்த வரிசையில் மறைந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க  கட்சியின் மூத்த முன்னோடி தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாக உள்ளது.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த வாஜ்பாயின், வாழ்க்கை வரலாற்று புத்தகம்  ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் வெளியானது. தற்பொழுது, இந்த புத்தகத்தை அடிப்படையாய் வைத்து வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாக உள்ளது. இதுகுறித்து இந்த படத்தை  தயாரிக்க உள்ள ஷிவ ஷர்மா கூறும்போது, “வாஜ்பாய் வாழ்க்கையை படமாக எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார். படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணி நடக்கிறது. வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. படத்துக்கு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என  கூறினார். வாஜ்பாய் கதாபாத்திரத்தில் யார்  நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.