கொட்டும் மழை... தவிக்கும் நீலகிரி...

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 7 நாளாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 92 செ.மீ மழை பெய்துள்ளது. முன்னதாக அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 82 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

இந்த மழை காரணமாக பல இடங்களில்  சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளன, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் உள்பட மொத்த நீலகிரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியை சுற்றியுள்ள பகுதியை வெள்ளம் சூழந்துள்ளது மேலும்  மின்விநியோகம் தடைபட்டுள்ளது, அங்கு பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூடலூர் பந்தலூர் பகுதிகளில் 10 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 180 குழந்தைகள் உள்பட 629 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தால் முகாம்களில் தங்கிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக பந்தலூரிலிருந்து கேரளா செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.