காவேரி தொலைக்காட்சி நிறுவனரின் அலுவலகம் முன் ஊழியர்கள் தர்ணா

அண்ணாநகரில் உள்ள காவேரி தொலைக்காட்சி நிறுவனரின் அலுவலகம் முன் ஊழியர்கள் தர்ணா.

கொடுக்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை கேட்கச்சென்ற ஊழியர்களை தள்ளிவிட்டு, ‘என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ... எவன்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ. இங்கேயே கிடந்தாலும் பரவால்ல. வாட்ச்மேனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் எனக்கு மிச்சம்!’ என திமிருடன் பதிலளித்துவிட்டு, காரில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.

அநியாயமாகவும் சட்டத்துக்கு புறம்பாகவும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை ஒரு நாளில் வேலையை நிறுத்தியது மட்டுமல்லாமல், ஊதிய பாக்கியை கொடுக்க கேட்டதற்கு அலைக்கழிக்கப்பட்டிருக்கின்றனர்.

செய்திகளை கொடுக்கும் ஊடகத்தில் இருப்பவர்களை பற்றிய செய்தியே வெளியே தெரியாத நிலை யதார்த்தமாக இருக்கிறது.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.