கார் ஓனர்களின் பர்ஸ் காலி

பெட்ரோல் டீசல் கார் ஓனர்களின் பர்ஸை காலி செய்யும் வேலை நடந்து வருகிறது. மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்ட மசோதா,  மோட்டார் வாகன உற்பத்தியாளர்களையும், வாகன உரிமையாளர்களையும்,  அதிகம்  கவலை கொள்ள செய்துள்ளது. 

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாரத் ஸ்டேஜ் 6 வகை வாகனங்கள் மட்டுமே இனி விற்க்கப்படும் என்ற நிலை உருவாகி வருகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பாரத்  ஸ்டேஜ் 4  கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட போது வாகன உற்பத்தியாளர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்தது. 

தற்போது பழைய வாகனங்கள் விற்கப்படுவதை மறைமுகமாக குறைக்கவே பதிவுக்கட்டணத்தை கடுமையாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பயணிகள் கார்களுக்கு ரூ 600 ஆக இருந்த பதிவுக்கட்டணம் ரூ 5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகன பதிவு ரூ 50 என்பது ரூ 1000 ஆக மாறியுள்ளது.
இதே போல கனரக வாகனங்களுக்கு ரூ 2000 திலிருந்து அதிரடியாக 40,000 மாக அதிகரித்துள்ளது.

பெட்ரோல் டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவே இந்த கட்டுப்பாடு என டிவிஎஸ் பஜாஜ் மற்றும் மஹிந்திரா வாகன உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மற்றொருபுறம் இது மின் வாகன உற்பத்தியாளர்களுக்காகவே இந்த நடவடிக்கை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.