காப்பான் திரைப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு

நடிகர் சூர்யா, இயக்குனர் கே வி ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான், ஹாரிஸ் ஜெய்ராஜ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வரும் செப்டம்பர் மாத இருதியில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் கதை தம்முடையது எனவும், சரவெடி எனும் தலைப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்திடம், தாம் கூறிய கதையை 'காப்பான்' என்ற பெயரில் கே.வி.ஆனந்த் தற்போது படமாக்கியுள்ளதாகவும் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரணையை வருகிற செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். நீதிமன்றத்தில் பேசிய ஜான் சார்லஸ் தன்னுடைய கதைப்படி, நதிநீர் இணைப்பு மற்றும் விவசாயம் குறித்தும் பிரதமரிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளராக கதாநாயகன் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.