காலையில் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை..!

காலை நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதனால் குளுக்கோஸ் வளர்ச்சி, சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவை தவிர்க்கின்றனர். இதனால் மாலை உணவை அதிகம் சாப்பிடுவதால் அதன்மூலம் கலோரிகள் அதிகரித்து உடல் எடையும் அதிகரிக்கக்கூடும். 

நம்மை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ள டோபமைன் (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) என்னும் இரண்டு ஹார்மோன்கள்  தேவை படுகிறது. காலை உணவை தவிர்ப்பதால் இந்த இரண்டு ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து அடுத்தவர்களிடம் எரிச்சல், நிதானமின்மை போன்ற செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. 

மேலும் மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும்.

எனவே காலை உணவை காட்டாயம் தவிர்க்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.