ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல்!

ஜேஎன்யு-வின் குறைவான கல்வி கட்டணம்தான், பொருளாதார ரீதியில் விளிம்பு நிலையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பெற வகை செய்துள்ளது. பல்கலைக்கழக விவரப்படி, 40 சதவீத மாணவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பின்புலத்தை சேர்ந்தவர்கள்.

 

இந்த ஆண்டு நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள், நவம்பர் 18ஆம் தேதி, திங்கள் கிழமைடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது.

 மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்   விடுதிக்கட்டண உயர்வு, உடை அணியும் விதிமுறைகள் மற்றும் விடுதிக்குள் மாணவர்கள் வருவதற்கும் வெளியே செல்வதற்குமான புதிய நேரக் கட்டுப்பாடு ஆகியவற்றிக்கு எதிராகமாணவர்கள் மூன்று வாரங்களாக போராடி வருகிறார்கள். 

விடுதி கட்டணம் ஆயிரம் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தங்கள் படிப்பையே  கைவிட்டுவிட வேண்டியிருக்கும் என்று ஏழை மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த கட்டண உயர்வின் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது மிகச்சிறிய அளவு. மாணவர்கள் இந்த கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ஜே என் யூ பல்கழைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அவர் விழா அரங்கில் பேசிக்கொண்டிருந்தபோதுவிடுதி கட்டண உயர்வை எதிர்த்து, மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் போலீஸ் ஏற்படுத்தியிருந்த தடை அரண்களை உடைத்துக்கொண்டு விழா அரங்கை நோக்கி சென்றபோதுபோலீசுக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போதும் மாணவர்கள் மீது போலீசால் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது .இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று, ஜே என் யு மாணவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர். அப்போதும் பல்கலைக்கழகத்தை சுற்றி போலீஸ் பெருமளவு குவிக்கப்பட்டுதடையரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆரம்பத்தில், பல்கலைக்கழக வாயிலுக்கு எதிரே இருந்த  தடையரண்கள் நீக்கப்பட்டு, மாணவர்கள் ஊர்வலமாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவு சென்றதும், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஏற்பட்ட மோதலுக்கு பின், போலீசார் மாணவர்களை கொடூரமாகத் தாக்கினர். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். தந்திரமாக, மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியே வரவைத்து, டெல்லி காவல்துறை  தாக்குதல் நடத்தியுள்ளது.

எங்களுடைய கல்வி உரிமைக்காக போராடிய காரணத்தால், நாங்கள்  12 பேர் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு, அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோம்,” என்று ஜே என் யு  மாணவர் சங்க தலைவர் ஆய்ஷே கோஷ் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை தடைசெய்வது, பல்கலைக்கழக வளாகத்துக்கு அப்பால் அமைதியான முறையில் குரல் கொடுக்கும் மாணவர்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது,”  என்று ஜே என் யு ஆசிரியர் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அமைதியாக ஊர்வலம் சென்ற ஜேஎன்யு மாணவர்களை தடுத்து நிறுத்தியது டெல்லி காவல்துறை. ஆணையம் அமைத்து மாணவர்களை ஏமாற்றுகிறது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம். பேச்சுவார்த்தை நடக்கும் வரை இந்த கட்டண உயர்வை ஏன் இந்த ஆணையம் நிறுத்தி வைக்கவில்லை? நாங்கள் கட்டண உயர்வை திரும்ப பெற தானே வலியுறுத்துகிறோம்?”, என்கிறார்  ஜேஎன்யு முன்னாள் மாணவர் சங்க தலைவர் என். சாய் பாலாஜி.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களில் ஒன்று. இதனுடைய குறைவான கல்வி கட்டணம் தான், பொருளாதார ரீதியில் விளிம்பு நிலையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பெற வகை செய்துள்ளது. பல்கலைக்கழக விவரப்படி, 40 சதவீத மாணவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பின்புலத்தை சேர்ந்தவர்கள். இந்த பல்கலைக்கழகம் மார்க்சிய கம்யூனிச சிந்தனைகளுக்கு விளைநிலமாக இருந்து வருகிறது. ஜேஎன்யு மீதான தாக்குதல் என்பது, சுதந்திர சிந்தனை மீதும், அனைவருக்கும் சமச்சீரான கல்வி என்ற கொள்கை மீதும் மோடியின் இந்துத்துவ அரசு  நிகழ்த்தும் தாக்குதலாகும். 

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.