சல்மான் கான் படம் ட்ராப் - அதிர்ச்சியில் ரசிகர்கள் 

பாலிவுட் திரையுலகின் சிறந்த இயக்குனர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் சஞ்சய் லீலா பன்சாலி, இவர் தன் ஆரம்ப காலங்களில் நடிகர் சல்மான் கானை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2007 ம் ஆண்டு வெளியான  சவாரியா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியில் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. வரும் ஈகை திருநாளுக்கு வெளியாகும் சல்மான் கானின்  திரைப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க உள்ளதாகவும், அந்த திரை படத்திற்கு இன்ஷால்லா என்ற தலைப்பும் வைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாய் முதன்முறையாய் அலியா பட் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாதி குறித்து சல்மான் கானுக்கும், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும்  இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் மேலும், சில எழுத்துவேலைகள் தேவைப்படுவதால் இப்படம் அறிவித்த தேதியில் வெளியாகாது என்றும்,  பன்சாலி பிக்சர்ஸ் அறிவித்தது. இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் சல்மான் கான் "சஞ்சய் லீலா பன்சாலி உடனான திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் உங்கள் அனைவரையும் 2020 ஈகைத் திருநாளில் சந்திப்பேன். இன்ஷா அல்லா" என பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து  இன்ஷால்லா திரைப்படம் ட்ராப் ஆகிவிடும் என்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன. இந்த வருடம் டிசம்பர் மாதம் சல்மான் கான் நடிக்கும் தபாங் 3 வெளியாகவுள்ள நிலையில், சல்மான் கான் நடிக்கவிருக்கும் படங்களான 'ஏக் தா டைகர்' படத்தின் மூன்றாவது பாகம், 'கிக்' படத்தின் இரண்டாம் பாகம், மேலும் இயக்குனர் சூரஜ் பர்ஜாத்யா இயக்கும் திரைப்படம்,   வெடரன்' என்கிற தென் கொரிய திரைப்படம் என வரிசையாய் திரைப்படங்கள் இருக்க இதில் எந்த திரைப்படம் அடுத்த ஆண்டின் ஈகை திருநாளில் வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.