அடுத்த ராக்கெட் சூரியனுக்கு!

சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்திய பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அடுத்தபடியாக சூரியனுக்கான முதல் பயணத்திற்குத் தயாராகி வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரோ அடுத்தகட்டமாக சூரியனை முழுமையாக ஆராயத் திட்டமிட்டுள்ளது. சூரியனை அருகிலிருந்து ஆராயும் திட்டமாக ஆதித்யா எல்-1(Aditya L-1) திட்டம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசா, 2018 ஆம் ஆண்டில் சூரியனை ஆராய்வதற்காக 'பார்க்கர் சோலார் ப்ரோப்(Parker Solar Probe)' விண்கலத்தை விண்ணில் ஏவியது. நாசாவின், பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்திற்குப் பிறகு சூரியனை ஆராய இந்தியாவின் ஆதித்யா எல்-1(Aditya L-1) விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆதித்யா எல் -1 திட்டத்தின் பணி, தற்போது அதன் திட்டமிடல் நிலையில் உள்ளது என்றும், வரும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படலாம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா-எல் 1 திட்டம், சூரியனின் கொரோனாவையும் அதன் வளிமண்டலத்தையும் ஆய்வு செய்ய இஸ்ரோவின் முதல் திட்டமிடப்பட்ட ஆய்வு ஆகும். இத்திட்டம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 2020 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.