ஆடி மாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைக்க இது தான் காரணம்..!

திருமணம் முடிந்த முதல் வருடத்தில் வரும் முதல் ஆடியை பெண்கள் அவர்கள் பிறந்தவீட்டில் தான் கொண்டாடுவார்கள். ஆடி பிறப்பதற்கு முன்னரே ஆடி வரிசை வைத்து, புதுமணப் பெண்ணை அழைத்துசெல்வார்கள். 

காலங் காலமாக கடைப்பிடிக்கும் இத்தகைய பழக்கவழக்கங்களுக்குப் பின்னால் ஒரு முக்கிய அறிவியல் காரணம் உண்டு.

ஆடி மாதத்தில் இறைவனுக்கே முக்கியத்துவம்,  அதனால் தான் புதுமனை புகுவிழா, திருமணவிழா போன்ற சுப காரியங்கள் விலக்கப்பட்டன. வழிபாடுகளை முன்னிலைப்படுத்தி திருமணமான புது தம்பதியரைப் பிரிந்திருக்க சொல்வார்கள். 

ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தைப் பிறக்கும். சித்திரையில் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அதனால் குழந்தைக்கும், தாய்க்கும் உடலில் எளிதில் நோய் தொற்று உண்டாக வாய்ப்புண்டு என்பதாலேயே தம்பதியரைப் பிரிந்திருக்க சொன்னார்கள். 

இன்று மருத்துவத்தில் பல முன்னேற்றம் இருந்தாலும், தம்பதிகள் விழிப்புணர்வு உடன் இருந்தாலும் சில வழக்கத்தை நாம் என்றும் மாற்றிக்கொள்ள விரும்புவது இல்லை. இதில் முக்கியமான ஒன்று தான் இது.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.