அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தால் அழிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

AUGUST 1, 2019

THECOASTALRESOURCECENTRE

 

சென்னை அருகே அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு  வருவதாகவுவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது காட்டுப்பள்ளி துறைமுகம், . இந்தியாவில் இருக்கும் மிகவும் நவீன துறைமுகங்களில் காட்டுப்பள்ளியும் ஒன்று. இந்த துறைமுகத் திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற இடங்களுக்குச் செல்வதும், பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிங்களுக்குச் செல்வதும் சுலபமாக இருக்கும் எனக் கூறப்படுகிளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு , ‘லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் எம்.ஐ.டி.பி.எல் நிறுவனங் களிடம் இருந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை வாங்கி அதானி குழுமம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதைத்தொடர்ந்து துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு ‘தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம்‘ பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளன.

 

இந்த நிலையில் அதானி நிறுவனத்தில் நடவடிக்கை காரணமாக, துறைமுகத்தை சுற்றியுள்ளப் பகுதிகளி, கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மணி அடித்து உள்ளனர். இந்த துறைமுகம் தொடர்பாக நிபுணர் மதிப்பீட்டுக் குழு (The Expert Appraisal Committee (EAC)) பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. ஆனால், தற்போது அந்த நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

காட்டுப்பள்ளி துறைமுகப்பணிகள் காரணமாக, காட்டுப்பளி பகுதி மற்றும் எண்ணூர் தெற்கு கடற்கரை பகுதியில் கடுமையான அரிப்பு ஏற்பட்டு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே என்னூர் துறைமுகத்தை நிர்மாணித்தபின் என்னூரின் தெற்கு கடற்கரைப் பகுதி அரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு பவந்த நிலையில், தற்போது, அது மேலும்  2.8 கி.மீ தூரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக கடல்நீர் உள்புகும் வாய்ப்பு உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து  சேவ் எண்ணூர்  பிரசார இயக்கம் (Save Ennore Creek Campaign) ஒருங்கிணைப்பாளர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபந்தராமன்  உள்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது, சுற்றுச்சூழல் விதிகளை மீறி காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்கப்பட்ட வருவதால், அதறகு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

துறைமுகம் அமைப்பதற்காக, கடலில், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொட்டி, வருகிறது அதானி நிறுவனம். இதன்  மூலம் கடலில் 2,000 ஏக்கர் நிலத்தை மீட்க நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், “இது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதி. இந்த வகை நடவடிக்கைகளை அங்கு  மேற்கொள்ள முடியாது, ”என்று கூறினார். இந்த திட்டத்தை ஆரம்ப கட்டத்திலேயே தமிழக அரசு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார். இல்லையெனில் அது வரும் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பேரழிவுகள் நிச்சயம் நிகழும் என்றும்  அவர் எச்சரித்தார்.

 

இதுகுறித்து பேசிய பூவுலகின் நன்பர்கலின் ஜி.சுந்தர்ராஜன், காட்டுப்பள்ளி துறைமுகப் பணி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பெல்ட் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை சந்திக்க வேண்டியதிருக்கும், தேவையற்ற மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்று கூறினார்.

 

காட்டுப்பள்ளி பகுதியை ஆய்வு மேற்கொண்ட கட்டிடக்கலை ஆசிரியரான சுதிர்,  நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் நிபந்தனைகளை  புறக்கணித்து, அதானி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக நிபந்தனைகள் வெளியிடப்பட்டு உள்ளன.  கடந்த 2009ம் ஆண்டு  சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மெமோராண்டம் படி, காட்டுப்பள்ளி துறைமுகம் அமைய உள்ள பகுதி, உயர் அரிப்பு மண்டலங்களில் அல்லது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதி. இந்த இடங்களில் துறைமுகங்கள் அமைப்பது தடைசெய்யப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் துறைமுகம் அமைக்க தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது என்று கூறினார்.

 

காட்டுப்பள்ளி துறைமுகம் அமைவதற்கு, அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய துறைமுகத்தால் மீனவர்கள், பொதுமக்கள் செய்து வரும் தொழில்கள் முடங்கியுள்ளன. அந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் முற்றிலுமாக அழியும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எனவே, . அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்து வருவதாக சூற்றுச்சூழல் நிபுணர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்து  உள்ளார்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.